‘எங்க மேலயே புகார் கொடுப்பியா..?’ இளம்பெண்ணின் வீட்டில் பெட்ரோல் குண்டுவீசி அட்டகாசம்… ரவுடிசம் காட்டிய 2 பேர் கைது!!
Author: Babu Lakshmanan27 டிசம்பர் 2022, 1:58 மணி
மதுரை ; மதிச்சியம் பகுதியில் பெண் வீட்டில் பெட்ரோல் குண்டுவீசப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாநகர் மதிச்சியம் ஆழ்வார்புரம் பகுதியில் திவ்யா என்ற இளம்பெண் வசிக்கக்கூடிய வீட்டில் திடீரென இன்று காலை பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் நடந்தது. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் மதுரை ஆழ்வார்புரம் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர்(19) சோனைமுத்து(19) ஆகிய இருவரையும் மதிச்சயம் காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட திவ்யா என்ற பெண் வசித்த வீட்டின் அருகே இவர்கள் அடிக்கடி மது அருந்துவதை வாடிக்கையாகக் கொண்டிருந்துள்ளனர். அண்மையில், குடித்துவிட்டு மதுபாட்டில்களை அங்கேயே போட்டு சென்றதோடு, அது பற்றி கேட்ட திவ்யாவை போதையில் ஆபாசமாக பேசி இருக்கின்றனர்.
இதனால், அதிர்ச்சியடைந்த திவ்யா, இந்த சம்பவம் குறித்து போலீஸில் புகார் தெரிவிததுள்ளார். இந்த நிலையில், புகார் அளித்த திவ்யா வீட்டு மீது பெட்ரோல் குண்டு வீசியது தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
0
0