மயக்க ஊசியால் மாட்டிக்கொண்ட மக்னா யானை.. கும்கி யானைகளின் உதவியுடன் சரண்டர்!!!

Author: Udayachandran RadhaKrishnan
31 July 2023, 10:09 am
Magna - Updatenews360
Quick Share

விவசாயிகளை பயமுறுத்திய மக்னா யானை சிக்கியது.. கும்கி யானைகளின் உதவியுடன் சரண்டர்!!!

தர்மபுரி மாவட்டத்தில் விவசாயிகளையும் பொதுமக்களையும் அச்சுறுத்தி வந்த மக்னா யானையை பிடித்து வனத்துறை அதிகாரிகள் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு டாப்ஸ்லிப் வனப்பகுதியில் பகுதியில் விட்டனர்.

ஆனால் அந்த யானை டாப்ஸ்லிப் பகுதியில் இருந்து ஆத்துப்பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வழியாக கோவை பேரூர் தொண்டாமுத்தூர் பகுதிகளில் சுற்றித்திரிந்தது கோவையில் மீண்டும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு வால்பாறை அருகே உள்ள மந்திரி மட்டம் வனப்பகுதியில் விடப்பட்டது.

ஆனால் கடந்த மூன்று மாதங்களாக சரளப்பதி, தம்பம்பதி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் முகாமிட்ட யானை விவசாய நிலங்களை சேதப்படுத்தியும் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.

தொடர்ந்து பொதுமக்கள் யானையை பிடிக்க வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தி அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை அடுத்து கடந்த சில மாதங்களாக யானை வரும் வழித்தடத்தில் முகாமிட்ட இருந்த வனத்துறை அதிகாரிகள் இன்று காலை மயக்க ஊசி செலுத்தி மக்னா யானையை பிடித்தனர்.

பின்னர் கபில்தேவ் கும்கி யானை உதவியுடன் வனத்துறை வாகனத்தில் ஏற்றப்பட்டு அதிகாரிகள் யானையை கொண்டு சென்றனர். அடர்ந்த வனப் பகுதியில் விடப்படும் அல்லது கும்கியாக மாற்றப்படுமா என்று பின்னர் அறிவிக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யானையை பிடிபட்டதும் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர் பொதுமக்கள் விவசாயிகளை அச்சுறுத்தி வந்த யானையை பிடித்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் திரும்பவும் இந்த பகுதிக்குள் வராமல் வனத்துறை அதிகாரிகள் அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் அல்லது கும்கியாக மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 176

0

0