லியோ படத்திற்கு சிக்கலா..? அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு ; அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்…!!

Author: Babu Lakshmanan
6 October 2023, 12:11 pm
Quick Share

லியோ படம் இந்த மாதம் வெளியாக உள்ள நிலையில், அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் மணிமண்டபத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஒலி, ஒளி காட்சியினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பி.கீதா ஜீவன், விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதை தொடர்ந்து, அமைச்சர் மு. பெ.சாமிநாதன் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் மணிமண்டபங்களில் எல்லாம் ஒலி, ஒளி காட்சி அமைப்பு அமைக்கப்பட வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். அதன் அடிப்படையில் 6 மணிமண்டபங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள பாரதி மணிமண்டபத்தில் முதன்முதலாக ஒலி, ஒளி அமைக்கப்பட்டு துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

மற்ற 5 இடங்களிலும் அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் அதனையும் துவக்கி வைக்கப்படும். நாட்டுக்காக உயிர் நீத்த தலைவர்கள் அவர்கள் ஆற்றிய தியாகம், தொண்டுகள் பற்றி இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த ஒலி, ஒளி அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.

சுதந்திரத்திற்காக அவர்கள் செய்த தியாகங்கள், தமிழுக்காக ஆற்றிய தொண்டுகள் இவற்றையெல்லாம் வெளிக்கொண்டு வருவது அவர் அவர்களுக்கு செய்யும் மரியாதை. அரசினுடைய கடமை என்ற வகையில் இதனை நிறுவி இருக்கிறோம். இது மக்கள் மத்தியில் நிச்சயமாக வரவேற்பு பெரும்.

லியோ பட பிரச்சினை குறித்து வரக்கூடிய தகவல்கள் பொதுவாக தான் வருகின்றன தவிர, அப்படத்திற்கு எந்த இடத்தில் என்ன பிரச்சனை என்று புகார் வந்தால் தவறு இருக்குமேயானால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பொதுவாக கூறக்கூடிய குற்றச்சாட்டுகளுக்கு அனுமானமாக பதில் கூற முடியாது.

தேர்தலில் அளித்த வாக்குறுதிபடி முதல்வர் ஸ்டாலின் பத்திரிக்கை நல வாரியம் அமைத்துள்ளார். பத்திரிக்கை நல வாரியம் அமைத்தபின் 4, 5 முறையில் எனது தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. பத்திரிக்கையாளர்களின் கோரிக்கைகள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு உதவிகள் சென்று வருகின்றன, என்றார்

திமுகவிற்கு எதிராக பாஜக போராட்டங்களை தீவிர படுத்த வேண்டும் என்று பாஜக கூட்டத்தில் அண்ணாமலை கூறியதற்கு, “ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் போராட உரிமை உள்ளது. எந்த ஆட்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது மக்களுக்கு தெரியும். போலி பத்திரிக்கையாளர்கள் களை எடுப்பதற்கு மூத்த பத்திரிக்கையாளர் கொண்ட குழு அமைக்கப்பட்டு ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில் போலி பத்திரிகையாளர்கள் களையெடுக்கப்படும், என்றார்.

Views: - 311

0

0