மார்ச் இறுதிக்குள் ஒன்றரை லட்சம் கோடி வருவாய் இலக்கு ; வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பேச்சு

Author: Babu Lakshmanan
29 December 2022, 8:33 am
minister moorthi - updatenews360
Quick Share

வணிக வரி மற்றும் பதிவுத்துறையில் மார்ச் மாதம் இறுதிக்குள் ஒன்றரை லட்சம் கோடி வருவாய் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- தமிழகத்தில் 576 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. ஆண்டொன்றுக்கு சராசரியாக 30 இலட்சம் ஆவணங்கள் பதிவுகள் நடைபெறுகிறது.

2021 – 2022 ஆம் ஆண்டில் 29,98,048 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு 13,913 கோடியே 65 இலட்ச ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் டிசம்பர் 27 வரை 25,38,984 ஆவணங்கள் பதியப்பட்டு 12,538 கோடியே 88 இலட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் 3,000 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

வணிக வரித்துறையில் 9 மாதங்களில் கூடுதலாக 25,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. வணிக வரி மற்றும் பதிவுத்துறையில் இதுவரை 1 இலட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மார்ச் இறுதிக்குள் ஒன்றரை இலட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்ட வேண்டும் எனும் இலக்கோடு வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயல்பட்டு வருகிறது, எனக் கூறினார்.

Views: - 458

0

0