குட்டி இறந்தது தெரியாமல் தட்டி தட்டி எழுப்பும் தாய் நாயின் பாசப்போராட்டம் : கரையாத மனதையும் கரைய வைக்கும் உணர்வுப்பூர்வமான காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
1 July 2022, 1:20 pm
Mother Dog Affection - Updatenews360
Quick Share

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்ற குறளுக்கு ஏற்ப த‌ன‌து குட்டி இற‌ந்த‌து கூட‌ தெரியாம‌ல் குட்டியை எழுப்ப‌ ப‌ல‌ ம‌ணி நேர‌ம் போராடிய தாய் நாயின் ப‌ரித‌விப்பு காட்சிக‌ள் கரையாத நெஞ்சையும் கரைய வைத்துள்ளது.

திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌ல் தாலுகா அலுவ‌ல‌க‌ம் அருகே உள்ள‌ புத‌ர் ப‌குதிக‌ளில் நாய் ஒன்று 5 குட்டிக‌ளை ஈ.ன்றுள்ளது.

மேலும் க‌ட‌ந்த‌ சில‌ நாட்க‌ளாக‌ அந்த‌ குட்டிக‌ளுக்கு தொட‌ர்ந்து உணவளித்து வ‌ந்துள்ள‌து. இத‌னை தொட‌ர்ந்து இன்று அந்த‌ நாய்க்குட்டிக‌ளில் ஒன்று இற‌ந்து விட்ட‌தாக‌ கூற‌ப்ப‌டுகின்ற‌து.

இத‌னிடையே நாய் குட்டி இற‌ந்த‌து கூட‌ தெரியாம‌ல் தாய் நாய் ப‌ல‌ வ‌ழிக‌ளில் பல ம‌ணி நேர‌ம் போராடி குட்டி நாயை எழுப்ப முய‌ற்ச்சி செய்த‌து. எனினும் முய‌ற்ச்சி ப‌லிக்க‌வில்லை.

இவ்வளவு நேரம் குட்டி தூங்குகின்றது என நினைத்து தாய் நாய் தட்டி தட்டி எழுப்பிய பாச‌ப்போராட்ட‌க் காட்சிக‌ள் ச‌மூக‌ வ‌லைத‌ல‌ங்க‌ளில் வைர‌லாகி ப‌ல‌ரின் மனதையும் உருக வைத்துள்ளது.

Views: - 154

3

0