மீனா வீட்டில் ரஜினி செய்த விஷயம்.. இணையத்தில் வீடியோவை வைரலாக்கும் ரசிகர்கள்.!

Author: Rajesh
1 July 2022, 1:10 pm
Quick Share

நடிகை மீனாவின் கணவர் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்த நிலையில் அவரது இறுதி சடங்கு நடைபெற்றது. அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக சினிமா துறையினர் பலரும் வந்திருந்தார்கள். ரஜினியும் மீனா வீட்டிற்கு சென்று வித்யாசாகருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

வெளியில் வரும்போது ரஜினிகாந்த் அவரது செருப்பை அணிய முற்பட்டார். அப்போது ஒரு நபர் வந்து அவரது செருப்பை அணிந்துகொள்ள உதவ முற்பட்டார்.

ஆனால் அவரை தடுத்த ரஜினிகாந்த் தானே தனது இரண்டு செருப்பையும் அணிந்துகொண்டு கிளம்பினார். அந்த வீடியோவை நெட்டிசன்கள் தற்போது வைரலாக்கி வருகிறார்கள்.

Views: - 615

44

18