அதிகாரிகளால் நூலிழையில் உயிர்தப்பிய நகராட்சி ஆணையாளர் : ஆக்கிரமிப்பு பணியின் போது பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
9 September 2023, 4:11 pm
Dgk -Updatenews360
Quick Share

அதிகாரிகளால் நூலிழையில் உயிர்தப்பிய நகராட்சி ஆணையாளர் : ஆக்கிரமிப்பு பணியின் போது பரபரப்பு!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி வ.உ.சி மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகள் நடக்கும் நடைபாதையில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளதாகவும் கடை வைத்திருக்கும் கடைக்காரர்கள் வீட்டு உபயோக சிலிண்டர்களை முறைகேடாக பயன்படுத்தி வருவதாகவும் தொடர்ந்து பொதுமக்கள் நடக்கும் பாதையில் சிலிண்டர்களை வைத்து ஆக்கிரமிப்பு செய்து வருவதாகவும் நகராட்சி ஆணையருக்கு புகார் வந்தது.

இதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் பாலமுருகன் நகர் நல அலுவலர் மனோஜ் குமார் ஆகியோர் தலைமையில் பேருந்து நிலையம் முழுவதும் ஆய்வு செய்தனர்.

ஆக்கிரமிப்பை அகற்றிக் கொண்டிருக்கும்போது கடையில் வைத்திருந்த பலகை திடீரென்று ஆணையாளர் மீது விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் உடனிருந்த அதிகாரிகள் பலகையை தடுத்து நிறுத்தியதால் நூலிலையில் நகராட்சி ஆணையாளர் பாலமுருகன் உயிர்த்தப்பினார்.

மேலும் ஆணையாளர் மீது பலகை விழுந்த நிகழ்வு சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பிளாஸ்டிக் குடோன்களில் நகராட்சி நிர்வாகம் சோதனை செய்தது அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை ஐந்து டன் அளவில் நகராட்சி நிர்வாகம் பறிமுதல் செய்தது

Views: - 250

1

0