சிறையில் இருந்து வெளியே வந்த சக்தி ஆனந்தன்… My V3 Ads வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு… வைரலாகும் ஆடியோ..!!
Author: Babu Lakshmanan16 பிப்ரவரி 2024, 11:38 காலை
ஜாமீனில் வெளியே வந்த மை.வி.3 ஆட்ஸ் நிறுவனர் சக்தி ஆனந்தன் – “தலைவர் is back” என்ற தலைப்பில் தனது யூடியூப் சேனலில் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த “மை வி 3″ ஆட்ஸ் என்ற நிறுவனம் நடந்து வருகிறது.இதில் 50 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.”மை வி3” ஆட்ஸ் நிறுவனம் மற்றும் நிறுவனத்தின் MD சக்தி் ஆனந்தன் மீது அண்மையில், சிலர் மாநகர காவல்துறை ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
இந்நிலையில் தன் மீதும், “மை வி3” ஆட்ஸ் நிறுவனம் மீதும் பொய் புகார் அளிக்கப்பட்டு இருப்பதாகவும், அந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உரிமையாளர் சக்தி ஆனந்தன் தனது நிறுவன ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 10 ம் தேதி போராட்டம் நடத்தினார்.
ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய ஆய்வாளர் அவரிடம் மனுவை பெற்ற பிறகும், காவல் ஆணையர் வர வேண்டும் என 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து போக போலீசார் அறிவுறுத்திய போதும் கலைந்து போகாமல், காவல் ஆணையரை சந்திக்காமல் போக மாட்டோம் எனக்கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.
சக்தி ஆனந்தை அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உட்பட இரு பிரிவுகளில் ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர். நிறுவனரை தொடர்ந்து “மை வி3” ஆட்ஸ் நிறுவனத்தின் மண்டல இயக்குநர்கள் ஐந்து பேர், அனுமதியின்றி கூடியது, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.
“மை வி 3” ஆட்ஸ் நிறுவனர் சக்தி ஆனந்தை ஒரு நாள் மட்டும் போலீசார் காவலில் எடுத்து விசாரித்து மத்திய சிறையில் அடைத்தனர். சக்தி ஆனந்தன் தரப்பில் ஜாமீன் கேட்டு நான்காவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். அதனை விசாரித்த நீதிபதி அவருக்கு ஜாமீன் வழங்கி உத்திரவிட்டார்.
ஜாமீன் கிடைத்த சக்தி ஆனந்தன் நேற்றிரவு கோவை மத்திய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த சக்தி ஆனந்தன் தனது யூடியூப் சேனலில் “தலைவர் is back” என தலைப்பிட்டு, வாடிக்கையாளர்களுக்கு உரிய சலுகைகள் திட்டமிட்டபடி அனைத்தும் கிடைக்கும் என்ற ஆடியோவை வெளியிட்டுள்ளார்.
0
0