அதிவேகமாக வந்த பைக்… டக்கென குறுக்கே திரும்பிய கார் ; தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள் ; அதிர்ச்சி சிசிடிவி!!
Author: Babu Lakshmanan16 February 2024, 11:50 am
வேடசந்தூர் அருகே கார் மீது இருசக்கர வாகனம் மோதும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கரூர் – திண்டுக்கல் நெடுஞ்சாலையில், வேடசந்தூர் அரசு போக்குவரத்து பணிமனை அருகே நாகம்பட்டியில் இருந்து வேடசந்தூருக்கு ஒரு இருசக்கர வாகனத்தில் மதன்குமார் மற்றும் வினோத் பாண்டி ஆகியோர் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது திண்டுக்கலில் இருந்து வேடசந்தூர் நோக்கி வந்த கார் ஒன்று திடீரென சாலையை கடந்துள்ளது. இதை சற்றும் எதிர்பார்க்காத இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள், காரின் மீது நேருக்கு நேராக மோதியுள்ளனர். இதில் இருசக்கர வாகனத்தில் வந்த மதன்குமார் மற்றும் வினோத் பாண்டி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.
அவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
0
0