கல் மேல் கல் பட்டால் ரூ.1000… டாஸ்மாக் கடையில் மதுப்பிரியர்களை மயக்கும் புது சூதாட்டம் : ஷாக் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
2 September 2023, 6:44 pm
Gambling- Updatenews360
Quick Share

கல் மேல் கல் பட்டால் ரூ.1000… டாஸ்மாக் கடையில் மதுப்பிரியர்களை மயக்கும் புதுமையான சூதாட்டம் : ஷாக் வீடியோ!!

கோவை நாச்சிபாளையம் பகுதியில் உள்ளது டாஸ்மாக் கடை. இந்த கடையில் மாலை நேரங்களில் அங்கு மது குடிக்க வருபவர்கள் புதுமையான சூதாட்டத்தை புகுத்தி வருகிறார்கள்.

அதாவது ஒருவர் ஒரு சிறிய கல்லை தூக்கி எறிந்து விடுவார். மற்றொருவர் அந்த கல் மீது படுமாறு கல்லை வீச வேண்டும். அப்படி பட்டு விட்டால் அவருக்கு ஆயிரம் ரூபாய் என கல்லை வைத்து சூதாட்டம் நடத்தி வருகின்றனர்.

இது போன்ற செயலால் அடிக்கடி சண்டை வருவதாகவும் அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். ஆகவே உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Views: - 252

0

0