வாழ்க்கையில் எத்தனை சோதனைகள் வந்தாலும்.. தன்னம்பிக்கையை விடக்கூடாது : மகளிர் மாநாட்டில் ஆளுநர் தமிழிசை பேச்சு!

Author: Udayachandran RadhaKrishnan
6 January 2024, 10:08 pm
tamilisa
Quick Share

வாழ்க்கையில் எத்தனை சோதனை வந்தாலும்.. தன்னம்பிக்கையை விடக்கூடாது : மகளிர் மாநாட்டில் ஆளுநர் தமிழிசை பேச்சு!

மதுரையில் சக்தி சங்கமம் கேசவ சேவா கேந்திரம் சார்பில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில் தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று பேசுகையில் “சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் பெண்களுக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு கிடைக்க போகிறது, இதற்கு முன் ஆட்சி புரிந்தவர்கள் பெண்களுக்கு இட ஒதுக்கீடு தருவோம் என கூறினார்கள், ஆனால் பிரதமர் மோடி பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா கொண்டு வந்துள்ளார்,

குடும்பத்தை மகிழ்ச்சியை வைத்து கொள்ள பெண்கள் முதலில் மகிழ்ச்சியாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும், பெண்களின் வாழ்க்கை பாதை என்பது கற்களாலும், முள்களால் ஆன பாதை, பெண்களின் திறமையை பார்ப்பது கிடையாது, மாறாக நிறம், அழகு, உயரத்தை பார்க்கிறார்கள், பெண்கள் அதிகமாக அரசியலுக்கு வர வேண்டும், வீட்டில் சாதித்த பெண்கள் பொது வாழ்க்கையிலும் வெற்றி பெற முடியும், பெண்களால் அவியலும் செய்ய முடியும், அரசியலும் செய்ய முடியும், உலகில் பெண்களால் சாதிக்க முடியாதது என எதுவும் இல்லை, இந்திய காலாசரமும், பண்பாடும் தான் கொரானாவில் இருந்து மக்களை காப்பாற்றியது, சத்தான பாரம்பரிய உணவுகளை எடுத்துக் கொண்டதனால் கொரோனாவில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடிந்தது, வாழ்வில் எத்தனை சோதனைகள் வந்தாலும் பெண்கள் தன்னம்பிக்கையை விட்டு விட கூடாது” என பேசினார்

Views: - 473

0

0