நான் வர வழியில் யாரு காரை நிறுத்தியது.. ஆவேசமாக காரை துரத்திய பாகுபலி.. ஷாக் VIDEO!

Author: Udayachandran RadhaKrishnan
6 May 2024, 11:48 am
Bahu
Quick Share

நான் வர வழியில் யாரு காரை நிறுத்தியது.. ஆவேசமாக காரை துரத்திய பாகுபலி.. ஷாக் VIDEO!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதியான சமயபுரம் பகுதியில் காட்டு யானை பாகுபலி தினம்தோறும் நெல்லி மலை வனப்பகுதியில் இருந்து கல்லாருக்கும் அதே போல கல்லாரில் இருந்து நெல்லி மலைக்கும் இடம்பெயர்ந்து வருகிறது.

அப்படி இடம் பெறக்கூடிய காட்டு யானை இந்த இரண்டு வனப்பகுதிக்குள் நடுவே உள்ள சமயபுரம் கிராமத்தின் வழியாக சாலையைக் கடந்து சென்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு நெல்லிமலையில் இருந்து கல்லார் வனத்திற்கு சென்ற காட்டு யானை பாகுபலி இன்று காலை மீண்டும் நெல்லி மலை வனத்திற்கு செல்ல பவானி ஆற்றினை கடந்து வந்தது.

அப்போது சமயபுரத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் சாலையின் அருகே சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தது உள்ள பெட்ரோல் பங்க் அருகே நின்று கொண்டிருந்தபோது அந்த சாலை மார்க்கமாக ஆல்டோ கார் ஒன்று வந்தது.

யானை இருப்பது தெரியாமல் அந்த கார் வந்து கொண்டிருந்த நிலையில் அங்க இருந்து பொதுமக்கள் எச்சரிக்கை செய்து காரை நிறுத்துமாறு கேட்டுள்ளனர்.

அவரும் காரை நிறுத்திய நிலையில் திடீரென காட்டு யானை பாகுபலி அந்த காரினை துரத்திச் செல்ல துவங்கியது இதனை சற்றும் எதிர்பாராத வாகன ஓட்டுனர் அதிர்ச்சி அடைந்த நிலையில் பின்னர் சுதாரித்து யானை அருகில் வந்தவுடன் விரைவாக காரை எடுத்துச் சென்றார்.

மேலும் படிக்க: அமைச்சரின் செயலாளர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை.. கட்டு கட்டாக சிக்கிய பணம் ; அரசியலில் ஷாக்!

இதனை அடுத்து சற்று தூரம் காரின் பின்னால் சென்ற காட்டு யானை பின்னர் காரை துரத்துவதை விட்டுவிட்டு சாலையில் நடந்து சென்று அருகில் இருந்த நெல்லி மலை வனப்பகுதிக்குள் சென்றது.

வறட்சி துவங்கிய நிலையில் யானைகளின் நடமாட்டம் மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் வனத்துறையினர் இந்த பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அந்த கிராம மக்கள் நடைபெறுவதற்குள் நடவடிக்கை தேவை என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் இதுவரை சென்று வந்த பாதையை மாற்றி உள்ள காட்டு யானை பாகுபலி தற்பொழுது புதிதாக ஒரு வழியை ஏற்படுத்தி அதில் செல்வதால் சாலையில் வெகு தூரம் நடந்து காட்டு யானை நெல்லி மலைக்குள் செல்கிறது. எனவே வனத்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 202

    0

    0