பாஜகவின் அழுத்தத்திற்காக செய்யவில்லை.. மக்களுக்காக மட்டும்தான் : அமைச்சர் சேகர் பாபு!!

Author: Udayachandran RadhaKrishnan
15 October 2021, 11:03 am
Sekar Babu - Updatenews360
Quick Share

சென்னை : பாஜகவின் அழுத்தத்திற்கு பணிந்து கோவில்களை திறக்கவில்லை. மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலேயே கோவில்கள் திறக்கப்பட்டது

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் மக்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

வார இறுதிநாட்களில் கோவில்களை திறக்க வேண்டும் என பாஜகவினர் வலியுறுத்தி வந்தனர். மேலும் திமுக அரசை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர். விஜயதசமி நாளில் கோவில்களை திறக்காவிட்டால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கையும் விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா ஆகியோர் பாஜகவின் கோரிக்கையை ஏற்று வழிபட்டு தலங்களை திறந்ததற்கு நன்றி என ட்வீட் செய்திருந்தனர்.

இந்நிலையில், இன்று சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சேகர் பாபு, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வழிபாட்டுத் தலங்களை திறக்கப்படும் என அறிவித்த முதல்வருக்கு பாராட்டு குவிகிறது.

தானாக கனியும் கனியை கூட நாங்கள் தான் கனிய வைத்தோம் என்று பாஜக கூறுவதாகவும், பாஜகவின் அழுத்தத்திற்கு பணிந்து கோவில்களை திறக்கவில்லை. மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலேயே கோவில்கள் திறக்கப்பட்டது என தெரிவித்தார்.

Views: - 470

0

0