தமிழில் உறுதிமொழியை படிக்க முடியாமல் திணறிய திருவள்ளூர் நா.த.க. வேட்பாளர்… இது சீமானுக்கு தெரியுமா..? என கிண்டல்!! (வீடியோ)!!

Author: Babu Lakshmanan
26 March 2024, 5:10 pm

வேட்புமனு தாக்கலின் போது தமிழில் உள்ள உறுதிமொழியை படிக்க முடியாமல் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் திணறிய சம்பவம் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்யும்போது உறுதிமொழி கூட சரியாக படிக்க தெரியாமல் திணறிய வேட்பாளருக்கு மாவட்ட ஆட்சியர் சொல்லிக் கொடுத்து உறுதிமொழி எடுத்தது பரபரப்பு ஏற்படுத்தியது.

வேட்பாளர் உறுதிமொழி படிக்க கொடுத்த போது, அதை படிக்க முடியாமல் திணறினார். உடனடியாக மாவட்ட ஆட்சியர் உறுதிமொழி எடுத்து படிக்கும் பொழுது, கூடவே நாம் தமிழர் கட்சியினர் படித்தார். அப்போது, அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தமிழுக்காக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் குரல் கொடுத்து வரும் நிலையில், தமிழில் உறுதிமொழியை கூட படிக்க முடியாமல் வேட்பாளர் மனு தாக்கல் செய்தது மக்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது.

மேலும், நாம் தமிழர் வேட்பாளருக்கு தமிழ் தெரியாது என்பது அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தெரியுமா..? என்று நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

  • Pushpa 2 Release and Reviews புஷ்பா 2 படத்தின் முதல் விமர்சனம்..பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
  • Views: - 265

    0

    0