கரிமவளம் நிறைந்த மண்ணால்தான் நதிகளில் நீரோடச் செய்திட முடியும் : சத்குரு ட்வீட்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 March 2023, 8:26 pm
Sathrguru - Updatenews360
Quick Share

கோவை சர்வதேச நதிகள் அமைப்பு “சர்வதேச நதிகள் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகள் தினத்தை” (International Day of Action for Rivers) ஆண்டுதோறும் மார்ச் 14 ஆம் தேதி கொண்டாடி வருகிறது.

அந்த வகையில் இந்தாண்டு சர்வதேச நதிகள் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகள் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இது குறித்து சத்குரு அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் குறிபிட்டுள்ளதாவது, “கரிமவளம் நிறைந்த மண்ணால்தான் மழைநீரை உறிஞ்சி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி, நதிகளில் நீரோடச் செய்திட முடியும்; வளமிழந்த மண்ணால் தண்ணீரை உறிஞ்சவோ, சேர்க்கவோ முடியாது, எனவே நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அல்லது வறண்டுவிடும். மண்காப்போம், நதிகளை காப்போம்.”

இவ்வாறு அவர் குறிபிட்டுள்ளார்.

Views: - 242

0

0