கணவன், மனைவி சண்டையால் பறிபோன 13 வயது சிறுமியின் உயிர் ; தாயின் சேலையில்… பழனியில் நிகழ்ந்த சோகம்..!!
Author: Babu Lakshmanan10 ஜூன் 2023, 1:09 மணி
பழனியில் தாய், தந்தை வீட்டில் அடிக்கடி சண்டை போட்டு கொள்வதால் மனமுடைந்த 8 வகுப்பு சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தெற்கு அண்ணா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார், இவரது மனைவி கவிதா. இவர்களது மகள் தேவதர்ஷினி வயது 13. இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக கணவன் செந்தில்குமாரும், மனைவி கவிதாவும், அடிக்கடி சண்டை போட்டு வந்தனர்.
நேற்று இரவு கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால், கவிதா கோபித்துக் கொண்டு, பொள்ளாச்சி அருகே உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். இதனால் சிறுமி தேவதர்ஷினி மனமுடைந்தார். வீட்டில் யாரும் இல்லாத பொழுது தனது தாயாரின் சேலையால், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தகவலறிந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பழனி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பழனி நகர போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய்,தந்தை வீட்டில் அடிக்கடி சண்டை போட்டு கொண்டதை பார்த்து மனமுடைந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
0
0