பில் தொகையை சீனியாரிட்டி அடிப்படையில் வழங்குக : கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் வலியுறுத்தல்!

Author: Udayachandran RadhaKrishnan
12 January 2024, 5:41 pm

பில் தொகையை சீனியாரிட்டி அடிப்படையில் வழங்குக : கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் வலியுறுத்தல்!

கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்கம் சார்பில் கோவை மாநகராட்சி நிர்வாகத்திற்கு அளித்துள்ள மனுவில், பில் (பட்டியல் ) தொகை முறையாக சீனியாரிட்டி படி வழங்காமல் பாரபட்சமாக ஒரு சிலருக்கு மட்டும் தொகை வழங்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை பரிசீலித்த கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் சீனியாரிட்டி அடிப்படையில் முறையாக பில் தொகை வழங்குவதாக உறுதி அளித்தார்.

இதை வரவேற்று சங்கத்தின் தலைவர் உதயகுமார் மற்றும் செயலாளர் KCP Infra Limited நிறுவனர் கேசிபி சந்திரபிரகாஷ் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

இதை தவிர கடந்த சில ஆண்டுகளாக ஒப்பந்ததாரர்கள் ராபர்ட் ராஜா மற்றும் B&C Infra உள்ளிட்ட நிறுவனங்களின் பட்டியல் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

முடிவற்ற பணிகளுக்கு பிடித்தம் செய்யப்பட்ட தொகை மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வழங்கப்படாமல் இருக்கிறது. இதனையும் தாமதமின்றி விரைவாக வழங்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்க செயலாளர் கேசிபி சந்திரபிரகாஷ் வலியுறுத்தியுள்ளார்.

  • manikandan rajesh sobhithaseparation சினிமா பிரபலங்களுக்கு என்ன ஆச்சு…விவாகரத்து வாங்கிய பிரபல நடிகை…!
  • Views: - 297

    0

    0