மக்களுக்காக மண்வெட்டியை கையில் எடுத்த காவலர்… யூனிஃபார்மில் மழை பாதிப்புகளை சரிசெய்த காவலருக்கு குவியும் பாராட்டு!!

Author: Babu Lakshmanan
11 நவம்பர் 2023, 8:35 காலை
Quick Share

கோவையில் மழையால் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்ட போக்குவரத்து உதவி ஆய்வாளர் முருகேசனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

கோவையில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டி வருகிறது. அந்த வகையில், நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால், பல்வேறு பகுதிகளில் உள்ள சாலை பள்ளம் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.

குறிப்பாக, உக்கடம் – செல்வபுரம் சாலையில் உள்ள சிந்தாமணி குளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதோடு, அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. செல்வபுரம் பைபாஸ் சாலையில் தேங்கி இருக்கும் தண்ணீரால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், தேங்கியிருக்கும் தண்ணீரை போலீஸ் போக்குவரத்து உதவி ஆய்வாளர் முருகேசன் சாலையில் மண்ணைக் கொட்டி பள்ளத்தை மூடி வருகின்றனர். பணியாளர்களுடன் சேர்ந்து காவலரும், சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுப்பட்டார். அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

https://player.vimeo.com/video/883470044?badge=0&autopause=0&quality_selector=1&player_id=0&app_id=58479
  • Vanathi CM வாழ்த்து சொல்லுவதே இல்ல.. விஜய் எல்லா பண்டிகைகளுக்கும் சொல்லணும் ; வானதி சீனிவாசன் பொளேர்!
  • Views: - 284

    0

    0