‘சுருளிராஜன் யாரு-னு தெரியுமா..?’… ஓசியில் சிக்கன் ரைஸ் கேட்ட பாமக நிர்வாகி ; ஓட்டல் உரிமையாளருக்கு மிரட்டல்

Author: Babu Lakshmanan
26 April 2024, 5:09 pm

ஓசி சிக்கன் நூடூல்ஸ், ஓசி சிக்கன் ரைஸ் கேட்டு ஹோட்டல் உரிமையாளருக்கு மிரட்டல் விடுத்த பாமக ஒன்றிய செயலாளரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் புவனகிரி பங்களா அருகில் விருத்தாசலம் சாலையில் ஜாகிர் உசேன்(38) என்பவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது கடைக்கு தெற்கு திட்டை கிராமத்தைச் சேர்ந்தவரும், புவனகிரி பாமக கிழக்கு ஒன்றிய செயலாளருமான சுருளிராஜன் (31) என்பவர் வந்தார்.

மேலும் படிக்க: மழலை மொழியில் வகுப்பறை அவலம் குறித்து வேதனை… வைரலான சிறுமியின் பெற்றோருக்கு சிக்கல்… மிரட்டும் கவுன்சிலர்!!

பின்னர் கடைக்காரரிடம் பத்து சிக்கன் நூடுல்ஸ், ஐந்து சிக்கன் ரைஸ் பார்சல் கட்டச்சொன்னார். அவர் கேட்டதுபோல் கடைக்காரரும் பார்சல்களை கட்டிக்கொடுத்து விட்டு அதற்கான பணத்தை கேட்டுள்ளார். அப்போது, சுருளிராஜன் நான் யார் தெரியுமா? என்கிட்டேயே பணம் கேட்கிறியா? என அதட்டி பேசி கடை உரிமையாளருக்கு மிரட்டலும் விடுத்தார்.

என்னிடம் பணம் கேட்டால் கடையை அடித்து உடைத்து விடுவேன் என்று தொடர்ந்து மிரட்டலும் விடுத்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த கடையின் உரிமையாளர் இது குறித்து புவனகிரி போலீசில் புகாரளித்தார். புகாரின் பேரில் விசாரணை செய்த போலீசார், பாமக புவனகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் சுருளிராஜன்மேல் வழக்கு பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஓசியில் சிக்கன் நூடூல்ஸ் மற்றும் சிக்கன்ரைஸ் கேட்டு பாமக ஒன்றிய செயலாளர் ஹோட்டல் உரிமையாளருக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!