தமிழக அரசின் முடிவு நல்லதுக்கு அல்ல…100 யூனிட் மின்சாரம் இலவசம் பாதிக்கும் ; எச்சரிக்கும் ராமதாஸ்…!!!

Author: Babu Lakshmanan
23 May 2024, 1:07 pm
ramadoss---stalin-updatenews360
Quick Share

முல்லை பெரியாறு அனையில் புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சி செய்து வருவதால், மத்திய அரசு புதிய அணை கட்ட அனுமதிக்க கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது :- தமிழகத்தில் மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்தக் கூடாது. ஒரே வீட்டில் இரண்டிற்கு மேல் மின் இணைப்பு இருந்தால் அதனை ஒரே மின் இணைப்பாக மாற்றும் மின்சார வாரியத்தின் நடவடிக்கை கண்டிதக்கது என கூறினார்.

மின் இணைப்பு ஒரே மின் இணைப்பாக மாற்றும் போது 100 யூனிட் மின்சாரம் இலவசம் பாதிக்கப்படுமெனவும், இதனால் வீடு வாடகைக்கு விடுபவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், கடந்த 2022 ஆம் ஆண்டு மின் கட்டனத்தை உயர்த்தி ஆணை வெளியிட்டது.

மேலும் படிக்க: கடவுள் நம்பிக்கை இல்லாத போது கோவில் நிர்வாகம் மட்டும் எதுக்கு..? திமுகவுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி

பாமகவின் அழுத்தத்தின் காரணமாக மின் கட்டணம் கடந்த ஆண்டு வீடுகளுக்கு ஜுலை மாதத்தில் உயர்த்தாமல், வணிக கட்டணங்களுக்கு மட்டும் மின் கட்டணம் உயர்த்தியது, மின் கட்டணம் உயர்த்தினால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால் மின்சார வாரிய மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும்.

முல்லை பெரியாறு அணையில் புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சி செய்து வருவதால், மத்திய அரசு புதிய அணை கட்ட அனுமதிக்க கூடாது என வலியுறுத்தியுள்ளார். முல்லை பெரியாறு அணை வலிமையாக உள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இருந்தும் கேரள அரசு முல்லை பெரியாறு அணையில் மீண்டும் மீண்டும் அணை கட்ட முயற்சி செய்து வருவதை கைவிட வேண்டும் என்று தெரிவித்தார்.

Views: - 146

0

0