என் ரசிகர்கள் மேல போலீஸ் கையை வெச்சுட்டாங்க : கோவையில் நடந்த கோப்ரா ப்ரோமஷன் நிகழ்ச்சயில் விக்ரம் உருக்கமான பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
24 August 2022, 5:44 pm

கோவை அவிநாசி சாலையில் உள்ள ஜி. ஆர்.டி., கல்லூரியில் வெளிவரவுள்ள கோப்ரா திரைப்படம் தொடர்பான சுவாரஸ்ய நினைவுகளை நடிகர் விக்ரம் மாணவர்களிடம் பகிர்ந்துகொண்டார்.

இதைதொடர்ந்து அருகே உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். விக்ரம் பேசும் போது..இந்த படத்தில் கிரவுண்ட் லெவல் நல்லா உள்ளது.
இந்தபடம் மாறுப்பட்ட கதை. எல்லா கேரக்டுக்கும் இதில் முக்கியதுவம் கொடுக்கப்பட்டுள்ளது. ரொம்ப எதிர்பார்ப்பு உள்ளது.

கதாப்பாத்திரம் சொல்லும் போது அதற்கேற்ப மாறுவது எனக்கு புடிக்கும்.. இந்த படத்தை சிரமப்பட்டு உருவாக்கியுள்ளோம். இதில் அனைவர் பங்கும் உள்ளது.

3 ஆண்டுக்கு பின் திரையரங்கில் படம் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அஜய்க்கு நன்றி. கடைசி வரை நடித்து கொண்டே இருப்பேன். அஜய் எனக்கென்று ஒரு கதை உருவாக்கியுள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் எனது ரசிகர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியது வருத்தம் அளிக்கிறது. சமீபமாக வரும் படங்கள் அதிக அளவில் ஹிட் ஆகிறது மகிழ்ச்சி அளிக்கிறது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?