இந்தியாவின் 2-வது பிரமாண்ட அனிமேஷன் திரைப்படம் இது தான்..! ‘எம்ஜிஆர் ஜெயலலிதாவின் பொன்னியின் செல்வன்’எப்போது ரிலீஸ்?

Author: Vignesh
26 September 2022, 12:05 pm

இந்தியாவின் இரண்டாவது அனிமேஷன் திரைப்படமான பொன்னியின் செல்வன் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. பொன்னியின் செல்வன் படம் வெளியாக இன்னும் சில நாட்களே இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் மணிரத்தினம் தான் இயக்கி படத்தை இருக்கிறார். இவர் பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக இயக்கி இருக்கிறார். மேலும், பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது.

இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியிட இருக்கிறார்கள். இந்த படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

பொன்னியின் செல்வன் அனிமேஷன் படம்:

இந்நிலையில் இந்த கதையை குழந்தைகள் உட்பட அனைவருக்கும் பார்க்கும் விதமாக அனிமேஷன் திரைப்படமாக இயக்குனர் சிவ முகில் இயக்கி இருக்கிறார். இவர் அரசு அடையாறு திரைப்பட கல்லூரி மாணவர் ஆவார். இந்த அனிமேஷனை நம்முடைய தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து எடுத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இதுவே முதல் இந்திய அனிமேஷன் திரைப்படமும் ஆகும். அதில் எம்ஜிஆர் வந்தியதேவனாகவும், ஜெயலலிதாவை குந்தவையாகவும் இயக்குனர் சித்தரித்து இருக்கிறார். இது குறித்து பிரபல பத்திரிக்கைக்கு இவர் பேட்டி கொடுத்து இருக்கிறார். அதில் அவர் கூறியிருந்தது, ரஜினி நடிப்பில் வெளிவந்த கோச்சடையான் தான் இந்தியாவிலே முதல் இந்திய அனிமேஷன் திரைப்படம்.

இயக்குனர் சிவ முகில் அளித்த பேட்டி:

தற்போது நாங்கள் எடுத்திருக்கும் பொன்னியின் செல்வன் கதை இந்தியாவின் இரண்டாவது அனிமேஷன் திரைப்படம். ‘எம்ஜிஆர் ஜெயலலிதாவின் பொன்னியின் செல்வன்’ என்பது தான் எங்களுடைய அனிமேஷன் திரைப்படத்திற்கான பெயர். 2017ல் இதற்கான வேலையை நாங்கள் தொடங்கி விட்டோம். ஆனால், நாங்கள் தொடங்கும் போது பொன்னியின் செல்வன் பற்றி பெரிதாக பேச்சு எதுவும் எழவில்லை. இதைப் பற்றி அறிந்த ஆனந்த விகடன் 2018ல் பொன்னியின் செல்வன் யாத்திரையில் எங்களை அழைத்து கௌரவித்திருந்தார்கள். அதற்கு இந்த நேரத்தில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது மணிரத்தினம் அவர்கள் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். கூடிய விரைவில் இந்த படமும் வெளிவர இருக்கிறது.

அனிமேசன் குறித்த தகவல்:

டிஸ்னி போன்ற திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் அனிமேஷனில் 3.0 தரத்தில் 4K தெளிவு திறனுடன் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம். சாய் அனிமேஷன் மற்றும் ஸ்கை ஹை மீடியா என்ற இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்த படத்தை பெரும் பொருட்செலவில் உருவாக்கியிருக்கிறது. 94 பேரின் மூன்றரை ஆண்டு கால உழைப்பாக இந்த படம் உருவாகி இருக்கிறது. மேலும், 2d கார்ட்டூன் படங்கள் போல் இல்லாமல் குங்ஃபூ பாண்டா போன்ற 3d லைவ் அனிமேஷன் திரைப்படமாக உருவாக்கி இருக்கிறோம். 2018ல் ஒரு பாடலையும் வெளியிட்டு இருந்தோம். 2020இல் மொத்த திரைப்படத்திற்கான வேலைகள் எல்லாம் முடிந்து விட்டது. ஆனால், கொரோனா காரணமாக படத்தை வெளியிடுவதில் சிரமம் இருந்தது. அதனால் தான் தற்போது அதற்கான வேலைகளை தீவிரமாக செய்து வருகிறோம்.

படம் ரிலீஸ் குறித்த தகவல்:

ஒரு நாவலை திரைப்படம் ஆக்குவது என்பது சவாலான செயல் தான். ஏனென்றால் சுவாரசியம் குறையாமல், விறுவிறுப்பாகவும் மனதிற்கு நெருக்கமாகவும் வெளிவர வேண்டும் என்று திரைக்கதையில் பல மாறுதல்கள் செய்திருக்கிறோம். எம்ஜிஆர் ஜெயலலிதா தவிர மற்ற கதாபத்திரங்கள் அனைத்தும் நாவல் ஆசிரியர் கல்கி பதிவு செய்திருக்கும் உருவங்களை தழுவையே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எம்ஜிஆர் உடைய கனவு நிறைவேறும் என்பதைவிட அவருடைய ஆத்மாவும் சாந்தி அடையும் என்று நம்புகிறோம். பொன்னியின் செல்வன் முதல் பாகம் அக்டோபர் அல்லது நவம்பர் 2022-ல் வெளிவர இருக்கின்றது. மொத்தம் ஐந்து பாகங்கள். முதல் பாகத்தின் வெளியிட்டு பிறகு தான் நான்கு பாகங்கள் வெளிவரும். ஒவ்வொரு திரைப்படமும் இரண்டு மணி நேரமாக வெளிவரும் என்று இயக்குனர் கூறியிருக்கிறார்.

  • Bigg Boss பிக் பாஸ் பிரபலத்துக்கு வந்த ஆபாச வீடியோக்கள்… மர்மநபரின் போட்டோவை வெளியிட்டு புகார்!
  • Views: - 542

    0

    0