ஜி PAY.. SCAN பண்ணுங்க.. SCAM பாருங்க : பிரதமர் மோடிக்கு எதிராக தமிழகம் முழுவதும் சுவரொட்டிகள்..!!!

Author: Udayachandran RadhaKrishnan
11 April 2024, 9:05 pm
Modi G pay
Quick Share

ஜி PAY.. SCAN பண்ணுங்க.. SCAM பாருங்க : பிரதமர் மோடிக்கு எதிராக தமிழகம் முழுவதும் சுவரொட்டிகள்..!!!

தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நாள் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களத்தில் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கட்சி கொடிகளும், வாக்களிப்பீர் போஸ்டர்களும் களத்தை பரபரப்பாக்கியுள்ளன.

இன்று தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பிரதமர் மோடி படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஆனால், இந்த போஸ்டர்களை ஒட்டி இருப்பது பாஜகவினர் அல்ல, திமுகவினர். பாஜக அரசை விமர்சிக்கும் வகையில் ஹைடெக் பிரச்சார வியூகத்தை முன்னெடுத்துள்ளது திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி.

பிரதமர் மோடி புகைப்படத்துடன் “ஜி PAY.. Scan பண்ணுங்க.. Scam பாருங்க” என்ற வாசகங்களுடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. அந்த போஸ்டர்களில் மோடி உருவத்துடன் இருக்கும் QR கோடை ஸ்கேன் செய்தால், பாஜகவின் ஊழல்கள் என ஒரு வாய்ஸ் ஓவரோடு கூடிய வீடியோ ஓடத் தொடங்குகிறது.

சுமார் 1 நிமிடம் 30 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில், “ஊழல் நிறைந்த இந்த மோடி அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நம் மானத்தையும் கோவணத்தையும் இழக்க நேரிடும். கறுப்புப் பணத்தை மீட்டு மக்களின் வங்கிக் கணக்கில் ரூபாய் 15 லட்சம் வரவு வைக்கப்படும் என சொன்னார்கள். ஆனால் அது என்னாச்சு? இவர்கள் செய்யும் வசூல் தான் அதிகமாகி உள்ளது” என தொடர்ந்து அந்த குரல் பேசுகிறது.

பிரதமர் மோடி வேலூரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திமுகவையும், காங்கிரஸ் கட்சியையும் ஊழல் கட்சிகள் என கடுமையாக விமர்சித்துப் பேசிய நிலையில், மோடி படத்துடன் பாஜக ஊழல்கள் எனக் குறிப்பிட்டு நூதன பிரச்சாரத்தை இந்தியா கூட்டணி முன்னெடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 107

0

0