கணவருக்காக மொட்டையடித்துக் கொண்ட லதா ரஜினிகாந்த் – வைரலாகும் வீடியோ..!

Author: Rajesh
8 April 2022, 6:45 pm

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்.. என ஸ்டைல் மன்னன் என இன்று வரை வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர் ரஜினிகாந்த், தாதா சாகேப் பால்கே விருது உட்பட பல உயரிய விருதுகளை பெற்றுள்ளார். திரை வாழ்வில் உச்சத்தில் இருந்தாலும் நிஜ வாழ்க்கை பல இன்னல்களை இன்று வரை சந்தித்து வருகிறார். கடந்த 2004 ஆம் ஆண்டு தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவை நடிகர் தனுஷுக்கு திருமணம் செய்து வைத்தார்.

ஐஸ்வர்யாவை விட தனுஷ் வயதில் சிறியவர் என்பதால் அப்போதே திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை ரஜினிகாந்த். ஆனால் ஐஸ்வர்யா பிடிவாதமாக இருந்ததால் விருப்பமே இல்லாமல் திருமணத்திற்கு சம்மதித்தார் ரஜினிகாந்த் என்ற தகவல்களும் அப்போது பரவியது. திருமணம் முடிந்து இருவரும் 18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இவர்களுக்கு யாத்ரா லிங்கா என்ற இருமகன்கள் உள்ளனர்.

இதனிடையே, இனி இருவரும் கணவன் மனைவியாக சேர்ந்து வாழப்போவதில்லை என கடந்த ஜனவரி மாதம் அறிவித்தனர். இதனால் ரொம்ப மனஉளைச்சலுக்கு ஆளானதாக, அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்து வருகின்றனர். இப்படி இருப்பதற்காகவா திருமணம் செய்து வைத்தேன் என குடும்பத்தினரிடமும் நெருங்கியவர்களிடம் புலம்பி தீர்க்கிறாராம் ரஜினி. இந்த நிலையில் கணவருக்காக லதா ரஜினி காந்த் மொட்டை அடித்துக்கொண்ட பழைய வீடியோவை, அவரது ரசிகர்கள் இணையத்தில் தற்போது வைரலாக்கியுள்ளனர்.

  • vijay is bjp c team explained by vanathi srinivasan விஜய் பாஜகவோட C team? தவெக குறித்து ஓபனாக போட்டுடைத்த பிரபலம்!