அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகள் அகற்றம் : எச்சரித்தும் எடுக்காததால் அதிகாரிகள் அதிரடி!!

Author: Udayachandran RadhaKrishnan
13 August 2021, 5:42 pm
Banner Removed - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : கொடைக்கானல் நகராட்சி பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகள் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகராட்சி பகுதியில் நகராட்சியின் அனுமதி இல்லாமல் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு நகராட்சி ஆணையாளர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் கூறியிருந்தார். இந்நிலையில் அப்படி அகற்றாத விளம்பரப் பலகைகளை ஆணையாளர் நாராயணன் தலைமையில் நகராட்சி நகரமைப்பு அலுவலர் நாசர், சுகாதார அலுவலர் சுப்பையா, நகரமைப்பு ஆய்வாளர் பார்த்தசாரதி உள்ளிட்ட அலுவலர்கள் அகற்றினார்கள்.

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டது. பேருந்து நிலைய பகுதி வளாகத்தில் தனியார் வாகனங்கள் நிற்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்

Views: - 220

0

0