தொழிலதிபர் வீட்டில் கைவரிசை…நகை, பணம் அபேஸ்: மிளகாய் பொடி தூவி சென்ற கொள்ளையர்களால் மக்கள் அச்சம்..!!

Author: Rajesh
15 May 2022, 5:45 pm

விருதுநகர்: அருப்புக்கோட்டையில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை முயற்சியின் போது மிளகாய்பொடி தூவி சென்ற கொள்ளையர்களால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வசந்தம் நகர் பகுதியை சேர்ந்தவர் சக்திகணேஷ்(45). தீப்பெட்டி தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார்.

வசந்தம் நகரில் வசித்துவரும் சக்தி கணேசின் மனைவி மற்றும் குடும்பத்தார் வெளியூர் சென்றதால் வீட்டில் தனியாக இருந்த சக்தி கணேஷ் நேற்றிரவு காந்திநகரில் உள்ள தனது உறவிணர் வீட்டில் தங்கிவிட்டு மீண்டும் இன்று காலை வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டை சுற்றி மிளகாய் பொடி போடப்பட்டிருப்பதை கண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த சக்திகணேஷ் உடனடியாக அருப்புக்கோட்டை நகர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் அப்பகுதியில் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் விசாரணையில் வீட்டில் நகை பணம் ஏதும் இல்லாததால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றது தெரியவந்தது.மேலும் அப்பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆளில்லாத வீட்டை நோட்டம் பார்த்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு கொள்ளையர்கள் மிளகாய் பொடியை தூவி சென்ற சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • The heir actor who divorced the actress has decided 10 வருடமாக குழந்தை இல்லாததால் புலம்பும் வாரிசு நடிகர்.. நடிகையை பிரிய முடிவு!