தங்க நகைப் பட்டறையில் ஒரு கிலோ தங்கம் கொள்ளை : அள்ளிச் சென்ற மர்மநபர்.. வைரலாகும் அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!
Author: Udayachandran RadhaKrishnan20 அக்டோபர் 2022, 12:46 மணி
தங்க நகை பட்டறையில் இருந்து ஒரு கிலோ தங்கம் கொள்ளை – மர்ம கொள்ளையர்கள் குறித்து காவல்துறை தீவிர விசாரணை.
கோவை சண்முக நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் குமார். இவர் அப்பகுதியில் தங்க நகை பட்டறையில் நகை செய்வதற்காக 1067.850 கிராம் வைத்திருந்தார்.
இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி இரவு கடையில் பணி புரியும் நோவா என்பவரிடம் கடை சாவியை ஒப்படைத்து விட்டு செல்வது வழக்கம்.
இந்நிலையில் நோவாவிடம் இருந்து சாவியை திருடிய கொள்ளையர்கள் தங்கத்தை கொள்ளையடித்து சென்றதாக தகவல் கூறப்படுகின்றது.
தங்கம் கொள்ளை போனதை குறித்து தங்கப்பட்டறை நகை உரிமையாளர் மோகன் வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார்.
இக்கொள்ளை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள வெரைட்டி ஹால் சாலை காவல்துறையினர் தங்க நகை திருடிய மர்ம கொள்ளையர்கள் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தங்க நகைப் பட்டறையில் மர்மநபர் கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
0
0