மகளுக்காக ரூ.2 கோடி மதிப்பில் சீர்வரிசை : மதுரையை அசத்திய அதிமுக முன்னாள் எம்எல்ஏ!!

6 November 2020, 3:53 pm
Dowry- Updatenews360
Quick Share

மதுரை : 2 கோடிக்கு சீர்வரிசை கொடுத்து அதிமுக முன்னாள் எம்எல்ஏ மதுரை மாவட்டத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

பெண்ணை பெற்றெடுத்து வளர்த்து திருமணம் செய்வதற்குள் ஒவ்வொரு பெற்றோரும் படாத பாடு சொல்லி மாளாது. புகுந்த வீட்டுக்கு அனுப்பும் போது பெண் பிள்ளைக்காக சேமித்து வைத்திருப்பதையெல்லாம் விற்கும் நிலைக்கு வந்த திருமணம் எல்லாம் உண்டு.

ஆனால் மதுரையில் தனது மகளுக்காக ரூ.2 கோடி மதிப்பில் சீர்வரிசை செய்து தந்தை அசத்தியுள்ளார். கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் சீர்வரிசை தொடர்பான போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வந்தது. அந்த சீர் வரிசையின் புகைப்படத்தை பார்த்தாலே தலை சுற்றிவிடும் அளவுக்கு ஏராளமான பாத்திரங்கள், அதுவும் தங்கதட்டுகள் முதல் சில்வர் தட்டுகள் வரையிலும், ஆடு முதல் கார்கள் வரை எக்கச்சக்கமான பொருட்கள் இருந்தன. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாக பரபரப்பை ஏற்படுத்தின.

தற்போது இந்த வீட்டு திருமணம் எங்கு நடந்தது என்பது தெரியவந்துள்ளது. மதுரை புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் முன்னாள் அதிமுக எம்எல்ஏவுமான தமிழரசுவின் மகள் திருமணத்திற்காக இந்த சீர்வரிசை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

அதிமுக முன்னாள் எம்எல்ஏ தமிழரசுவின் மகள் கீர்த்திக்கும் கொடிமங்கலம் பகுதியில் உள்ள வி.பி வைத்தியநாதன் என்பவரின் மகன் வெற்றிவேல் என்பவருக்கும் கடந்த 4ம் தேதி நாகமலை புதுக்கோட்டை பகுதியில் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்திற்காக ஆடுகள், கார்கள், டிராக்டர், வீட்டு பொருட்கள் உள்ளிட்டவற்றை சீர்வரிசையாக வழங்கப்பட்டது. இந்த சீர்வரிசைகள் திருமண மண்டபத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு திருமணத்திற்கு வாழ்த்த வந்தவர்கள் ஆச்சரியமடைந்தனர்.

ஏராளமான சீர்வரிசைகள் வைக்கவே ஒரு வீடே பத்தாது என்ற அளவில் அந்த சீர்வரிசை இருந்தது. இதன் மதிப்பு ரூ.2 கோடி என கூறப்படுகிறது. மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் வாயடைத்து போயுள்ளனர்.

Views: - 22

0

0