VAO-வை லாரி ஏற்றி கொல்ல முயற்சி… மணல் கடத்தலை தடுக்கச் சென்ற போது பயங்கரம்.. பழனியில் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
13 October 2023, 4:09 pm
Quick Share

பழனி அருகே வி.ஏ.ஓ மற்றும் உதவியாளர், காவலர்கள் என நான்கு பேர் மீது லாரி ஏற்றி கொலை முயற்சி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடி பொன்னிமலைசித்தன் கரடு பகுதியில் அனுமதியின்றி மண் அள்ளியதாக பொதுமக்கள் தொடர் புகாரின் அடிப்படையில், லாரியை பிடிக்க சென்ற கிராம நிர்வாக அலுவலர் கருப்புசாமி, உதவியாளர் மகுடிஸ்வரன், பொதுமக்களுடன் சம்பவம் இடத்திற்கு சென்று லாரிகளை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டார்.

அப்போது, ஆயக்குடி பகுதியைச் சேர்ந்த பாஸ் அல்லாததும், வேறொரு பகுதியான தாதநாயக்கன்பட்டியைச் சேர்ந்த குலத்திற்கான பாஸ் வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து காவல் நிலையத்திற்கு லாரிகளை கொண்டு செல்லுமாறு விஏஓ கருப்பசாமி கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து, லாரிகளை எடுத்துக்கொண்டு, ஆயக்குடி காவல் நிலையம் செல்வதற்காக முன்னால் லாரிகளை செல்ல விட்டு பின்னால் விஏஓ, அவருடைய உதவியாளர் சென்று கொண்டிருந்தனர். அப்போது, திடீரென லாரிகளை வேகமாக இயக்கியும், பின்னால் இருசக்கர வாகனங்கள் பின் தொடராத வண்ணம், ஜிப்பில் வந்தவர்கள் இருசக்கர வாகனத்தை முந்தவிடாமல் அவர்களை வலது புறமும், இடது புறமும் வானத்தை இயக்கி பின்னால் லாரியின் பின்னால் கதவை திறந்து விட்டு மண்ணை மேலே கொட்டியும் கொலை முயற்சி ஈடுபட்டனர்.

இதில் அச்சமடைந்த விஏஓ கருப்பு சாமி ஆயக்குடி காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். காவலர்கள் இருவர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். காவலர்கள் மீதும் லாரியை மேலே ஏற்றி மோதுவது போல் பாசாங்கு செய்துவிட்டு, இரு லாரிகளையும் எடுத்துக்கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

அங்கிருந்த பொதுமக்கள் ஆயக்குடி காவல் நிலையத்தில் காவல்துறையினர் உள்ளிட்ட நால்வர் மீதும் லாரியை மேலே ஏற்றி கொலை முயற்சி செய்தும், உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் ஏற்படுத்திவிட்டு லாரியுடன் தப்பி ஓடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வி.ஏ.ஓ. மற்றும் உதவியாளர் ஆயக்குடி
காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 305

0

0