அழகு நிலையம் வெளியே….பாலியல் தொழில் உள்ளே: 4 பெண்கள் மீட்பு…கோவையில் பரபரப்பு..!!

Author: Aarthi Sivakumar
26 September 2021, 5:10 pm
Quick Share

கோவை: அழகு நிலையத்தில் வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூலூர் கண்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் வயது 38, இவருக்கு ராவத்தூர் பிரிவில் சொந்தமான கட்டிடம் உள்ளது. அந்த கட்டிடத்தை தேனியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு வாடகைக்கு விட்டார். அவர் அந்த கட்டிடத்தில் அழகு நிலையம் நடத்தி வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நவநீதகிருஷ்ணன் அங்கு சென்றார். அப்போது சில இளைஞர்கள் ரகசியமாக உள்ளே சென்று வருவதைப் பார்த்தார். இதனால் சந்தேகம் அடைந்த அவர் அந்த இளைஞர்களை பிடித்து விசாரித்தார்.

மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்: கேரள பெண்கள் உள்ளிட்ட 14 பேர் அதிரடி கைது!  - TopTamilNews

அப்போது அங்கே பெண்களை வைத்து விபசாரம் நடப்பது தெரிய வந்தது. இதனால் நவநீதகிருஷ்ணன் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக சூலூர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். இதையடுத்து விபச்சாரம் நடத்தி வந்த கார்த்திக் என்பவரை கைது செய்தனர்.

விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட புதுச்சேரியைச் சேர்ந்த 27 வயது பெண், திருப்பூரைச் சேர்ந்த 33 வயது பெண், கொல்கத்தாவைச் சேர்ந்த 26 வயது பெண், திருவண்ணாமலையைச் சேர்ந்த 27 வயது பெண், ஆகிய 4 பெண்களை மீட்டு போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

கோவையில் தொடர்ந்து மசாஜ் சென்டர் மற்றும் அழகு நிலையங்களில் அழகிகளை வைத்து விபச்சாரம் தொடர்ந்து நடைபெற்று வருவது அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.
தொடர்ந்து போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து இவற்றை ஒழிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Views: - 211

0

1