உறங்கும் ரோந்து பணி… .உறங்காமல் தவிக்கும் மக்கள் : நள்ளிரவில் வாகனங்களை குறி வைக்கும் ‘ப்ரொபஷனல்’ கொள்ளையர்கள்..!! (வீடியோ)

Author: Udayachandran RadhaKrishnan
20 July 2022, 11:52 am
Bike Theft - Updatenews360
Quick Share

கோவை : நள்ளிரவில் உறங்கும் காவல் துறையின் ரோந்து பணியால் வாகன திருட்டு பீதியில் உறங்காமல் வாகன உரிமையாளர்கள் தவிக்கின்றனர்.

கோவையில் நள்ளிரவில் வாகனம் திருடும் கொள்ளையர்கள் அதிகரித்திருக்கின்றனர். போலீசாருக்கு வருகின்ற புகாரில் வாகன திருட்டு புகார் இல்லாத நாளே இல்லை. திருட பயிற்சி எடுத்துக்கொண்டவர்கள் போல நோட்டமிட்டு வண்டியை லாவகமாக திருடி செல்கின்றனர்.

குழுவாக வந்து வண்டி சைட் லாக்கை உடைத்து மற்றொரு திருட்டு நண்பரின் உதவியுடன் டோ செய்து லாவகமாக திருடி செல்கின்றனர். வாசலில் நிறுத்தப்பட்டிருக்கின்ற வாகனத்தை சைட் லாக்கை உடைத்து வண்டியை சாவி இன்றி வையர் மூலமாக இயக்கி அசால்ட்டாக திருடி செல்கின்றனர்.

கள்ள சாவியிலும் வாகனத்தை திருட்டு கும்பல் திருடி செல்கின்றனர். அதனடிப்படையில் கோயமுத்தூரில் இந்த மாதம் மட்டும் மர்ம நபர்களின் கைவரிசையால் 100க்கும் மேற்ப்பட்ட வாகனங்கள் திருடப்பட்டதாக புகார் தரப்பட்டன.

ஃபுரபசனல் திருடர்கள் ஊடுருவி விட்டனரா என்ற கேள்வி எழுகின்ற வகையில் வாகனங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வருவது வாகன உரிமையாளர்களை பீதியில் ஆழ்த்தியிருக்கின்றன.

எனவே இரவு நேரங்களில் போலிஸ் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளன. உறக்கத்தை கெடுத்த இந்த ஃபுரபசனல் திருடர்களின் கொட்டத்தை அடக்க உறங்காமல் போலிஸ் ரோந்து பணியை மேற்க்கொள்வார்களா என்பது வாகன உரிமையாளர்களின் கேள்வியாக இருக்கின்றன.

Views: - 476

0

0