கிரிக்கெட் மட்டையால் அடித்து தந்தையை கொலை செய்த மகன் : குடிபோதையில் ஏற்பட்ட தகராறால் விபரீதம்…!!

Author: Udayachandran RadhaKrishnan
27 February 2022, 1:24 pm
Murder - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : பழனி அருகே குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்ட தந்தையை, மகன் அடித்துக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது சத்திரப்பட்டி. இங்குள்ள முல்லைநகர் பகுதியில் ஓமந்தூரான் என்பவர் தனது மனைவி மற்றும் மகன், மகளுடன் வசித்து வருகிறார்.

இவர் கேரளாவில் பைனான்ஸ் தொழில் செய்துவருகிறார். தினமும் குடித்துவிட்டு, மனைவி மற்றும் மகன், மகளிடம் தகராறு செய்து ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு ஓமந்தூரான் குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்துள்ளார்.மேலும் தனது மனைவி மற்றும் மகளை அடித்ததாக தெரிகிறது.

இதனையடுத்து ஒமந்தூரானின் மகன் கிரிவிஷ்ணு தந்தையை தடுத்துள்ளார். அப்போது இருவருக்குமிடையே வாக்காவாதம் ஏற்பட்டு கைகலப்பு நடந்தநிலையில், ஆத்திரம் அடைந்த மகன் கிரிவிஷ்ணு அங்கிருந்த கிரிக்கெட் மட்டையால் தந்தையை தலையில் தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த ஓமந்துரான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து மகன் கிரிவிஷ்ணு கிரிக்கெட் மட்டையுடன் சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இதுகுறித்து சத்திரப்பட்டி போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்ட தந்தையை மகன் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 837

0

0