முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டும் இப்ப வரைக்கும் வேலையே கொடுக்கல… கணவனை இழந்த மாற்றுத்திறனாளி பெண் தர்ணா..!!

Author: Babu Lakshmanan
10 October 2022, 6:39 pm
Quick Share

தமிழக முதல்வர் ஸ்டாலின் பணி வழங்க உத்தரவிட்டும், கண்டுகொள்ளாத தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளைக் கண்டித்து மாற்று திறனாளி பெண் ஒருவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கார் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானந்தல் கிராமத்தைச் சார்ந்த வள்ளியம்மாள் என்ற பெண் கணவனால் கைவிடப்பட்ட மாற்றுத்திறனாளி. இவர் முதலமைச்சர் ஸ்டாலின் தூத்துக்குடி வருகை தந்த போது, முதல்வரிடம் தான் கணவனால் கைவிடப்பட்ட மாற்றுத்திறனாளி வேலை வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இதனை ஏற்ற முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுத்து இவருக்கு பணி நியமன உத்தரவை வழங்கி உள்ளார். ஆனால், அந்த உத்தரவு இன்று வரை தனக்கு கிடைக்கவில்லை என்று கண்ணீர் மல்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்திந்து அவர் கூறுகையில், “மாற்றுத்திறனாளி ஆன நான்இரு மகனையும் படிக்க வைக்க முடியாமல் பால் பாக்கெட் விற்பனை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறேன். எனவே, முதலமைச்சர் வழங்கிய உத்தரவு இத்தனை நாள் வரை வழங்காத நிலையில், எனது படிப்பு, ஜாதி சான்றிதழ், ஆதார் கார்டு, ஓட்டுனர் உரிமம், ரேஷன் கார்டு, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் ஆட்சி தலைவரிடம் ஒப்படைக்கிறேன்,” என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டார்.

இவர் மாவட்ட ஆட்சித் தலைவர் காரின் முன்னால் அமர்ந்து போராட்டம் செய்வதை காவல்துறையினர் தடுக்க முயற்சித்தும், அவர் அங்கிருந்து நகரவில்லை. இதனையடுத்து, காவல்துறையினர் பெண் காவலர் மூலமாக இவரை குண்டு கட்டாக துவக்கி ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் முன் தரையில் அமர வைத்தனர்.

தொடர்ந்து அவர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவரை சர்க்கரை நாற்காலி மூலமாக ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 304

0

0