திடீர் உடல்நலக்குறைவு… பாமக தலைவருக்கு என்னாச்சு? அவசர அவசரமாக அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த ராமதாஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 August 2023, 10:51 am
Ramadass - updatenews360
Quick Share

திடீர் உடல்நலக்குறைவு… பாமக தலைவருக்கு என்னாச்சு? அவசர அவசரமாக அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த ராமதாஸ்!!

பாமக கவுரவ தலைவரும், எம்எல்ஏவுமான ஜி.கே.மணி கடந்த சில நாட்களாக தொண்டை வலி, தலைவலி, தலைசுற்றல் ஆகியவற்றாலும் அவதிப்பட்டு வந்துள்ளார்.

மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ததில் தொண்டை குரல் வளையில் இருக்கும் கட்டியை அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு கட்டி அகற்றப்பட்டது.

தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு முன்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று காலை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

Views: - 280

0

0