சாலையோர வியாபாரிகளை கொண்டாடும் ‘ஸ்வநிதி மஹோத்ஸவ்’ நிகழ்ச்சி : வியாபாரிகளின் அவலங்களை விளக்கும் நாடகம் அரங்கேற்றம்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 July 2022, 11:30 am
Swanidhi Mahotsav - Updatenews360
Quick Share

சாலையோர வியாபாரிகளை கொண்டாடும் விதமாக கோவையில் ‘ஸ்வநிதி மஹோத்ஸவ்’ என்ற தலைப்பில் சுயசார்பு சாலையோர கொண்டாட்டம் நடைபெற்றது.

கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வஉசி மைதானத்தில் ஸ்வநிதி மஹோத்ஸவ்’ என்ற தலைப்பில் சுயசார்பு சாலையோர கொண்டாட்டம் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் சாலையோர வியாபாரிகள் ஸ்டால்கள் அமைத்து பொருட்களை விற்பனை செய்தனர்.

குறிப்பாக சாலையோர சிற்றுண்டி உணவு வகைகள், மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருட்களின் கண்காட்சி ஆகியவை இடம்பெற்றிருந்தன. இதனை கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இதில் மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, பொது சுகாதார குழு தலைவர் மாரிசெல்வன்,மண்டல தலைவர் மீனா லோகு, மத்திய அரசின் பார்வையாளர் நிஸ்தா கக்கர்,வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் மத்திய மற்றும் மாநில அரசின் கடன் பெற்று சிறப்பாக செயல்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் புதிதாக கடன் உதவிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கடன் தொகை வழங்கப்பட்டது.

தொடர்ந்து சாலையோர வியாபாரிகளின் தினந்தோறும் படும் கஷ்டங்கள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தின் முக்கியத்துவம் குறித்த நாடகங்கள் மற்றும் நடனங்கள் அரகேற்றப்பட்டது.

Views: - 474

0

0