நிலவில் இருந்து பார்த்தாலும் இனி தமிழ் தெரியும் : சட்டப்பேரவையில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
13 April 2023, 7:02 pm
Moon Tamizh - Updatenews360
Quick Share

அமைச்சர் மெய்யநாதன் சுற்றுச்சூழல் துறையின் புதிய அறிவிப்புகளை சட்டசபையில் இன்று வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது: ரூ.10 கோடி மதிப்பீட்டில் 50 பள்ளிகளில் கால நிலை மாற்றம் குறித்து அறிய பசுமை பள்ளிக்கூடத் திட்டம். காலநிலை மாற்றம் தொடர்பாக பள்ளிகளில் செயல்படும் சூழல் மன்றங்கள், காலநிலை மன்றங்களாக புதுப்பித்து மாற்றியமைக்கப்படும்.

பசுமை தமிழ்நாடு திட்டத்தின்கீழ் 1,000 குறுங்காடுகள் தொழிற்சாலைகளால் உருவாக்கப்படும். ரூ. 10 கோடியில் உள்ளாட்சி நிறுவனங்களுக்கு இடையே, காலநிலை மாற்றத் தழுவல் மற்றும் தணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பசுமை சவால் நிதி உருவாக்கப்படும்.

பொதுமக்கள் அதிகளவில் கூடும் மையங்களில் சூழலுக்குகந்த பழக்க வழக்கங்களை ஊக்குவிக்க ரூ. 50 லட்சத்தில் சூழலுக்குகந்த வாழ்வியல் சான்றிதழ் வழங்கப்படும்.

நிலவில் இருந்து பார்த்தாலும் தமிழ் என்று தெரியும் வகையில் 100 ஏக்கர் பரப்பளவில் மாதிரி காடு உருவாக்க திட்டம் சென்னையில் குப்பை சேகரிப்பவர்களுக்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

Views: - 224

0

0