குப்பைக்கு கூட வரி போட்டவர்தான் தமிழக குப்பை முதலமைச்சர் ஸ்டாலின் : சி.வி. சண்முகம் கடும் விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 July 2023, 2:24 pm
CV Shanmugam - Updatenews360
Quick Share

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் தமிழக திமுக அரசில் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தக்காளி விலை உயர்வினை கண்டித்து மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தலைமையிலான அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் மேடையில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம், செயல்படாத தமிழக முதலமைச்சராக உள்ள ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததால் விலைவாசியை கண்டுக்குள் கொண்டு வருவோம் மக்களை பாதிக்கிற திட்டங்களை செயல்படுத்த மாட்டோம் என பல்வேறு வாக்குறுதிகளை அளித்தனர்.

அதனை பின்பற்றாமல் திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லிக்கொண்டு திருடர்கள் மாடல் ஆட்சி நடைபெறுவதாகவும் இவர்களின் வேஷங்கள் கலைந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

தவறுகளை மூடி மறைத்தாலும் அணைத்தும் கலைகின்ற நேரம் வந்துவிட்டதாகவும் திமுக ஆட்சி வீட்டிற்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது இந்த ஆட்சியிலுள்ள திருடர்கள் திகார் ஜெயலிக்கும், புழல் சிறைக்கும் அனுப்பும் நேரம் வந்துவிட்டதாகவும் செந்தில் பாலாஜியை அடுத்து பொன்முடி, அனிதா ராதாகிருஷ்ணன் அமலாக்க துறை விசாரனை செய்யும் காவல் துறையை கையில் வைத்துகொண்டு திமுகவின் தொண்டர்படையாக காவல் துறை செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார்.

அமலாக்க துறையை வைத்து கொண்டு எதிர்கட்சிகளை பாஜக முடக்க பார்ப்பதாக கூறும் ஸ்டாலின் லஞ்ச ஒழிப்பு துறையை வைத்து கொண்டு முன்னாள் அமைச்சர்கள் மீது விசாரணை செய்யும் போது தெரியவில்லையா என கேள்வி எழுப்பினார்.

இது வெறும் சோதனை தான் இன்னும் இருக்கிறது உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை வரும் போது தான் தெரியும். உப்ப தின்னவன் தண்ணீ குடிச்சி தான் ஆகனும் ஊழல் குறித்து பேசும் அருகதை ஸ்டாலினுக்கோ அவரது குடும்பத்தினருக்கே கிடையாது என்றும் குப்பைக்கு கூட குப்பை வரி போட்டவர்தான் தான் தமிழக குப்பை முதல்வர் விஞ்ஞான ரீதியில் கொள்ளை அடிக்கும் நிலை தான் திமுகவில் உள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் திருடர்களான ஸ்டாலின் ஆட்சியில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகவும், மக்களுக்கான பணத்தை தமிழக முதலமைச்சர் கொள்ளையடித்து கொண்டிருப்பதால் தான் ஒவ்வொருத்தராக ஜெயிலுக்கு சென்று கொண்டிருப்பதாகவும், அதிமுக ஆட்சியில் கொரனோ காலத்திலும் விலைவாசி கட்டுக்குள் இருந்தது.திமுக ஆட்சியில் விலைவாசியை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என கூறினார்.

நிர்வாகம் செய்வதற்கு திமுக ஆட்சிக்கு நேரமில்லை எப்போது அமலாக்க துறையினர் வருவார்கள் என அமைச்சர்கள் பயத்தில் உள்ளனர். தமிழகத்தில் நிழல் முதலமைச்சராக உள்ள ஸ்டாலின் பெங்களுரிவில் நடைபெற்ற எதிர்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட சென்றபோது கூட்டணியில் உள்ள கர்நாடகாவிடம் தண்ணீர் குறித்தும், தக்காளி விலை உயர்வை கட்டுபடுத்துவது குறித்து பேசவில்லை என சிவி சண்முகம் குற்றச்சாட்டினார்.

Views: - 231

0

0