தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்திற்கு உயரிய விருது அறிவிப்பு : கோபால் ரத்னா விருதை பெறப்போகும் ‘அந்த’ மாவட்டம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
24 November 2023, 10:01 pm
Award - Udpatenews360
Quick Share

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்திற்கு உயரிய விருது அறிவிப்பு கோபால் ரத்னா விருதை பெறப்போகும் ‘அந்த’ மாவட்டம்!!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள எம்.எஸ்.58 நத்தம்- கோவில்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் கால்நடை வளர்ப்பு துறையில் உள்ள உயரிய தேசிய விருதுகளில் ஒன்றான கோபால் ரத்னா விருதிற்கு தேர்வு மத்திய அரசு அறிவிப்பு.

சிறந்த பால் கூட்டுறவு சங்கம்,பால் உற்பத்தியாளர் நிறுவனம்,பால் பண்ணை உற்பத்தியாளர் அமைப்பின் கீழ் எம்.எஸ்158 நத்தம்- கோவில்பட்டி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.

இந்த பால் உற்பத்தியாளர் சங்கத்தில் தற்போது சுமார் 852 நபர்கள் உறுப்பினராக உள்ளனர். தினம்தோறும் சுமார் 11, 017 லிட்டர் அளவிலான பால் ஆவின் நிறுவனமும் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்நிறுவனம் கடந்த 2022-2023 ஆம் ஆண்டில் சுமார் ஒன்பது லட்சம் லாபம் வரை லாபம் ஈட்டி உள்ளனர்.

இந்நிறுவனத்தின் மூலம் விவசாயிகளுக்கு தேவையான பொருட்கள் வாங்கி தருவது விவசாயிகளுக்கு தேவையான கடன் உதவிகள் போன்றவற்றையும் பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மூலம் சிறப்பாக செய்துள்ளனர்.மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ஸ்ரீ பர்ஷோத்தம் ரூபாலா தேசிய கோபால் ரத்னா விருதுகளை வருகின்றன.

வரும் நவம்பர் 26ம் தேதியன்று அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் வழங்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Views: - 264

0

0