அந்த 2 நாட்கள் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது : கோவை மாவட்ட ஆட்சியர் போட்ட உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
26 September 2023, 3:59 pm
Tasmac - Updatenews360
Quick Share

வருகின்ற 28ம் தேதி மிலாடி நபி மற்றும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கோவையில் உள்ள மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிப கழகம் மதுபானக் கடைகள் (FL1) அதனுடன் இணைக்கப்பட்ட மதுக்கூடங்கள் (BAR), அனைத்து பொழுதுபோக்கு மனமகிழ்மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள் (F2), நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள் (FLB), தமிழ்நாடு ஹோட்டலில் செயல்படும் மதுக்கூடம் (FLBA) மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் (FL11) விற்பனை செய்யும் கடைகள் அனைத்தம் மீலாடி நபி 28.09.2023 மற்றும் காந்தி ஜெயந்தி 02.10.2023 ஆகியவற்றை முன்னிட்டு குறிப்பிட்ட இரு தினங்களும் Dry Day ஆக கடைப்பிடிப்பதால் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

விதிமுறைகளுக்கு முரணாக மேற்குறிப்பிட்ட தேதியில் மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது சட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 295

0

0