கபடி, கபடி, கபடி… மாணவர்களுடன் கபடி விளையாடிய அமைச்சர் பொன்முடி : வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
26 September 2023, 5:00 pm
Ponmudi Kabaddi - Updatenews360
Quick Share

கபடி, கபடி, கபடி… மாணவர்களுடன் கபடி விளையாடிய அமைச்சர் பொன்முடி : வைரலாகும் வீடியோ!!

கலைஞர் நூற்றாண்டு விழா மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியினை துவக்கி வைத்த அமைச்சர் பொன்முடி விளையாட்டு வீரர்களுடன் கபடி விளையாடினர்.

கலைஞர் நூற்றாண்டு விழா விளையாட்டு போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்கத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான இளைஞர்களுக்கான கபடி, வாலிபால், மல்லர்கம்பம் போன்ற விளையாட்டு போட்டிகள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்டு இன்று நடைபெற்றது.

இப்போட்டியில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளை சேர்ந்த 200 க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கலந்து கலந்து கொண்டனர்.

இன்றைய தினம் கபடி மற்றும் மல்லர்கம்ப விளையாட்டு போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிகளை உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் இன்று டாஸ் போட்டு கபடி போட்டியை துவக்கி வைத்தார்.

மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் அவர்களுடன் களத்தில் இறங்கி கபடி போட்டியினை விளையாடினர். இதைக் கண்ட அங்கிருந்த போட்டியாளர்கள் மற்றும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் ஆரவாரம் செய்து கைத்தட்டினர்.

இந்த நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் மாவட்ட விளையாட்டு அலுவலர் வேல்முருகன் உள்ளிட்ட கல்லூரி மாணவ மாணவிகள் விளையாட்டு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றி பெறும் வீரர் வீராங்கனைகளுக்கு ஜனவரி மாதம் பரிசளிப்பு விழா நடைபெறும்.

Views: - 438

0

0