பெரியார் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற அர்ச்சகர்: காஞ்சிபுரத்தில் பரபரப்பு!!

17 September 2020, 1:33 pm
Periyar Bday Hindu Priest- updatenews360
Quick Share

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் சங்கரமடம் எதிரே நடைபெற்ற பெரியார் பிறந்தநாள் விழாவில் கோவில் அர்ச்சகர் கலந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரியாரின் 142 பிறந்தநாளை ஒட்டி காஞ்சிபுரம் சங்கரமடம் எதிரே உள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு இன்று அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பெரியாருக்கு ஆதரவாகவும், நீட் தேர்வை எதிர்த்து கோஷங்களை எழுப்பி கொண்டிருந்தபோது சாலையில் சென்ற கோவில் அர்ச்சகர் பெரியார் ஆதரவாளர்கள் வழங்கிய துண்டு பிரசுரங்களை பெற்றுக்கொண்டார்.

பின்னர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியவர்களுடன் கலந்துகொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டார். காஞ்சிபுரம் சங்கரமடம் எதிரே நடந்த பெரியார் பிறந்த நாள் விழாவில் கோவில் அர்ச்சகர் கலந்து கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 10

0

0