ஒருநொடியில் நடந்த சம்பவம்… 40 பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்து வாய்க்காலில் பாய்ந்து விபத்து ; தஞ்சை அருகே நிகழ்ந்த சோகம்..!!
Author: Babu Lakshmanan24 April 2024, 11:01 am
தஞ்சை அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பயணி ஒருவர் உயிரிழந்தார். மேலும், 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே மானாங்கோரை ஸ்டார் லைன் கல்லூரி அருகே கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு புறநகர் பேருந்து சென்று கொண்டிருந்தது.
மேலும் படிக்க: தி.க. மாவட்ட செயலாளர் போல பேசும் ராகுல் காந்தி… மோடி பேசுனதுல என்ன தப்பு இருக்கு..? வானதி சீனிவாசன் வக்காலத்து..!!!
அப்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அய்யம்பேட்டை காவல்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பேருந்தில் பயணம் செய்த தஞ்சாவூரை சேர்ந்த லட்சுமி (50) என்பவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
மேலும், விபத்து குறித்து அய்யம்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0
0