திடீரென மிரண்ட மாடுகள்… மாட்டு வண்டியில் இருந்து கீழே விழுந்த தேமுதிக வேட்பாளர்… வாக்குசேகரிப்பின் போது பரபரப்பு…!

Author: Babu Lakshmanan
4 April 2024, 2:01 pm

தஞ்சை தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் சிவநேசன், வாக்கு சேகரிப்பின் போது, திடீரென மாட்டு வண்டியில் இருந்து தவறி கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தஞ்சை தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் சிவநேசன் திருவையாறு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாத்தூர், மாத்தூர் கிழக்கு, மேற்கு, நல்லிச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தார்.

மேலும் படிக்க: IPL 2024 : மும்பை அணியில் இருந்து விலக ரோகித் சர்மா முடிவு? ரசிகர்கள் அதிர்ச்சி!!

மாத்தூர் காளியம்மன் கோவிலில் வழிப்பட்ட வேட்பாளர் சிவநேசனுக்கு கோவில் குருக்கள் பூர்ண கும்ப மரியாதையுடன் பரிவரிட்டம் கட்டி வரவேற்றார்.

வாக்கு கேட்டு வந்த வேட்பாளர் சிவநேசன் மீது பெண்கள் பூக்கள் தூவி ஆரத்தி எடுத்து ஆட்டம் போட்டு வரவேற்பு அளித்தனர். கூட்டத்தில் மஞ்சள் புடவை கட்டிய பெண் ஒருவர் திடீரென சாமியாட்டம் ஆடி குறி சொன்னார். குறி சொன்ன பெண்ணின் காலில் விழுந்து வேட்பாளர் ஆசி பெற்றார்.

மேலும் படிக்க: குடியரசு தலைவருக்கே இந்த நிலைமையா..? இதுதான் பாஜக ஆட்சி ; கோபத்தில் கொந்தளித்த கனிமொழி..!!!

கூட்டத்தில் இருந்த மூதாட்டி ஒருவர் தப்பு இசைக்கு வைஃப் ஆகி சாலையில் புலி ஆட்டம் ஆட தொடங்கினார். வேட்பாளர் சிவநேசன் தன் உடன் வந்த கட்சி நிர்வாகிகளுக்கு இளநீர் வெட்டி கொடுத்தார்.

பின்னர் மாத்தூர் சாலையில் இரட்டை மாட்டு வண்டி ஒட்டி வாக்கு சேகரித்து வந்தார். அப்போது மாடு மிரள வண்டியில் இருந்து தவறி கீழே விழுந்தார். நல்வாய்ப்பாக கீழே இருந்தவர்கள் அவரை தாங்கி பிடித்தனர். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!