பயிற்சி மருத்துவரை நாற்காலியால் விரட்டி விரட்டி அடித்த நபர் : அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சிகள்..!!

10 April 2021, 1:54 pm
thanjai hospital 1 - updatenews360
Quick Share

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி டாக்டர் மீது தாக்குதல் நடத்தப் பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மேல வண்டிக்காரத் தெருவைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் விபத்தில் காயமடைந்தார். அவரை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு நேற்றிரவு அவரது உறவினர்கள் கொண்டு சென்றனர். அங்கு வரவேற்பு அறையில் பணியாற்றிய பயிற்சி மருத்துவரிடம் சிகிச்சை அளிக்க கூறினர். அப்போது மருத்துவருக்கும் காயம் அடைந்த வாலிபரின் உறவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றியதால் அங்கு இருந்தவர்கள் பயிற்சி மருத்துவரை நாற்காலியை கொண்டு தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அங்கு உள்ள பொருட்களை சேதப்படுத்தியதால் மருத்துவர்கள் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியர் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தி மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்ற பிறகு, போராட்டம் கைவிடப்பட்டு பணிக்கு திரும்பினர். மருத்துவரை அவர்கள் தாக்கக்கூடிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து மருத்துவ கல்லூரி மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 22

0

0