பள்ளி மாணவிக்கு காதல் வலை வீசி கடத்தி சென்ற வாலிபர்…!! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்…!

Author: kavin kumar
1 February 2022, 7:52 pm
Quick Share

கன்னியாகுமரி : மார்த்தாண்டம் அருகே 11 வகுப்பு மாணவியை ராங் காலில் கணெக்ட் ஆக்கி நாகபட்டினம் கடத்தி சென்று குடும்பம் நடத்தி வந்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே சரல் பகுதியை சேர்ந்தவர் அஜின் (20). பெயிண்டிங் வேலை செய்து வரும் இவருக்கு மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி பேரை பகுதியில் உறவினர்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன் அஜின் தனது தொலைபேசியில் பேரையில் உள்ள உறவினருக்கு தொடர்பு கொண்டு பேச முயன்றுள்ளார். அப்போது ஒரு எண் தவறுதலாகி  பேரை பகுதியை சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவிக்கு கால் சென்றுள்ளது. அழைப்பை எடுத்த மாணவி ராங்க் நம்பர் என கூறி துண்டித்து உள்ளார்.


இதனை தொடர்ந்து எதிர்முனையில் பேசியது பெண் என்பதை தெரிந்து கொண்ட அஜின் அந்த எண்ணை தனது செல்போனில் பதிவு செய்து வைத்துகொண்டு சில நாட்கள் தாண்டி மீண்டும் அழைத்துள்ளார். பின்னர் இருவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசி வந்துள்ளனர். நாளடைவில் இது காதலாக மாறி உள்ளது. இந்த நிலையில் அஜின் மாணவியை வீட்டில் இருந்து கடத்தி சென்றுள்ளார். இதனை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் மகளை பல இடங்களில் தேடி பார்த்துள்ளனர். எங்கும் கிடைக்காத நிலையில் மார்த்தாண்டம் மகளீர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் அஜின் மாணவியுடன் நாகப்பட்டினத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்து குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் மாணவியை மீட்பதற்காக நாகப்பட்டினம் விரைந்து சென்று இருவரையும் சுற்றி வளைத்து பிடித்து மார்த்தாண்டம் மகளீர் காவல்நிலையம் கொண்டு வந்து மாணவியை கடத்தி சென்று குடும்பம் நடத்திய குற்றத்திற்காக அஜின் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் மாணவிக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யபட்டு முகாமில் தங்க வைத்துள்ளனர்.

Views: - 1017

0

0