“பொன்னியின் செல்வன்” தனக்கு திருப்தி இல்லை என கூறிய பிரபலம்.. கடும் அப்செட்டில் மணிரத்தினம்..!

Author: Rajesh
21 May 2022, 1:39 pm

பாகுபலி 1,2, ஆர்.ஆர்.ஆர், கேஜிஎப் 1,2 என போன்ற வேறு மொழி திரைப்படங்கள் பிரமாண்டமாக தயாராகி பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதைபோல் தமிழ் மொழியில் வராத என ரசிகர்களின் ஏக்கங்களை நிறைவேற்றும் விதமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.
இயக்குனர் மணிரத்னம் முதன்முறையாக ஒரு பிரம்மாண்ட திரைப்படத்தை இயக்குகிறார் என்றவுடன் ரசிகர்களிடம் ஆர்வம் அதிகமானது. அதேபோல் இத்திரைப்படம் 2 பாகமாக தயாராகிறது. அந்த 2 பாகத்திற்கான சூட்டிங் முடிந்து விட்டது. இந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் பாகம் அடுத்த வருடம் இரண்டாம் பாகம் என வெளியிட முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தினை வெளியிடு செய்வதற்காக பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. முதல் பாகத்தில் எந்தெந்த காட்சிகள் வரவேண்டும் என்ற எடிட்டிங் வேலைகள் முடிந்து விட்டதாம். பின்னர் ரகுமானிடம் பின்னணி இசைக்காக படம் அனுப்பி வைக்கப்பட்டதாம்.
அந்த காட்சிகளை போட்டு பார்த்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு திருப்தி இல்லையாம். காட்சிகள் சரியாக வரவில்லை, கதைக்குரிய பிரம்மாண்டம் இதில் இல்லை என மணிரத்னத்திடமே சொல்லிவிட்டாராம் ரகுமான்.

எந்த படத்திற்கும் யாருக்கும் மனது நோகாமல் சொல்லும் ரஹுமானே இப்படி படத்தை பற்றி சொல்லி விட்டாரே, என்று படக்குழுவும் தற்போது கலக்கத்தில் இருக்கிறதாம். மீண்டும் அந்த காட்சியை ஷூட் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதா, இல்லை அந்த காட்சிகளை நீக்க உள்ளதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?