மாணவர்கள் திட்டியதால் நடுரோட்டில் அரசு பேருந்தை நிறுத்திவிட்டு இறங்கிய ஓட்டுநர் : விழுப்புரத்தில் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
17 October 2023, 2:10 pm
Govt Bus - Updatenews360
Quick Share

மாணவர்கள் திட்டியதால் நடுரோட்டில் அரசு பேருந்தை நிறுத்திவிட்டு இறங்கி ஓடிய ஓட்டுநர் : விழுப்புரத்தில் பரபரப்பு!!

விழுப்புரத்தில் இருந்து கோலியனூர் கூட்ரோடு வரை செல்லும் அரசு பேருந்து காலை மற்றும் மாலை வேளையில் மாணவர்கள் நலன் கருதி சென்ற ஆண்டு அப்போதைய மாவட்ட ஆட்சியர் மோகன் மாணவர்களுக்கு மட்டும் இயங்கும் பேருந்து என்று பள்ளி சென்று வரும் நேரங்களில் இந்த பேருந்தை இயக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி இவ்வளவு நாட்கள் மாணவர்கள் மட்டும் என்று ஸ்டிக்கர் ஒட்டியபடி பேருந்து இயக்கப்பட்டது. தற்போது மாவட்ட ஆட்சித் தலைவர் மாறியதால் இந்த பேருந்தை கோலியனூர் கூட்ரோடு வரை செல்லும் பொதுமக்கள் சென்றுவரும் அரசு பேருந்தாகவே மாற்றப்பட்டது.

இந்நிலையில் கோலியனூர் கூட் ரோட்டில் இருந்து நேற்று காலை வந்த இந்த அரசு பேருந்து ராகவன்பேட்டை பேருந்து நிலையத்தில் மாணவர்கள் நின்று கொண்டிருந்தவர்களை ஏற்றாமல் வந்ததாக கூறி இன்று வந்த அரசு பேருந்தில் ஏறி மாணவர்கள் நடத்துனர் மற்றும் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் கம்பன் நகர் பகுதியில் சாலையிலேயே பேருந்தை இயக்காமல் நிறுத்தி பேருந்தில் இருந்து இறங்கி வந்து ஓரமாக அமர்ந்து விட்டார்.

பின்னர் அதில் இருந்த பயணிகள் மாற்றுப் பேருந்தில் ஏறி சென்று விட்டனர். ஆனால் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது அவர் நேற்று நான் பேருந்த இயக்கவில்லை என்று கூறிய பின்னர் தான் மாணவர்கள் அமைதி அடைந்தனர். பின்னர் அரசு பேருந்து அங்கிருந்து மாணவர்களுடன் சென்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 346

0

0