சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து செல்போனை நோண்டிக் கொண்டிருந்த அரசு அதிகாரி : சிறு, குறு வியாபாரிகள் அதிருப்தி!!

Author: Udayachandran RadhaKrishnan
21 April 2023, 4:19 pm
Cell phone - Updatenews360
Quick Share

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கோவில் வளாகத்தில் பூ, பழம், டீ உள்ளிட்ட பல்வேறு பொருள்களை 200-க்கும் மேற்பட்ட சிறு குறு வியாபாரிகள் பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சிறு குறு வியாபாரிகள் கோவில் வளாகத்தில் வியாபாரம் செய்ய தடைவிதித்ததுடன் கோவில் வளாகத்தில் இருந்து வெளியேறும்படி நேற்று தெரிவித்துள்ளனர்.

மேலும் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் உதவியாளர் வேல் ராமகிருஷ்ணன் சிறு குறு வியாபாரம் செய்து வந்த மூதாட்டியை காலால் எட்டி உதைத்து பொருள்களை தட்டி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி சிறு, குறு வியாபாரிகள், அகில பாரத இந்து மகா சபா அமைப்பினர் கோவில் இணை ஆணையர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் இன்று நடைபெற்றது .

சமாதான கூட்டத்தில் கோவில் இணை ஆணையர் கார்த்திக் பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல் செல்போனை நோண்டி கொண்டிருந்தது வியாபாரிகளிடம் அதிர்ப்தியை ஏற்படுத்தியது..

வியாபாரிகளின் முக்கிய வாழ்வாதாரம் பிரச்சினைக்கு தீர்வு காண நடந்த கூட்டத்தில் கோவிலின் இணை ஆணையர் அலட்சியமாக செயல்பட்டது அங்கிருந்தவர்களை அலட்சியப்படுத்துவதாக இருந்ததாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த பேச்சுவார்த்தை கூட்டத்தில் சிறு, குறு வியாபாரிகள் வழக்கம் போல் வியாபாரத்தை தொடங்கலாம் என முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவெடுப்புக்கு வியாபாரிகள் வரவேற்று இனிப்பு வழங்கினர்.

Views: - 176

0

0