சுடுகாட்டில் தோண்டப்பட்ட சவக்குழி… திடீரென குழியில் படுத்து போராட்டம் செய்த நபரால் பரபரப்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
21 April 2023, 4:02 pm
Burial Grd - Updatenews360
Quick Share

ஓட்டப்பிடாரம் அருகே பச்சைபெருமாள் புரம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி முத்து மகன் அப்பாவு ( 80) என்பவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்துள்ளார்.

தொடர்ந்து அவரது உறவினர்கள் அடக்கம் செய்வதற்காக பச்சை பெருமாள்புரம் கிராமத்திற்கு கிழக்கே அமைந்திருக்கும் சுடுகாட்டில் குழி தோண்டி தொடர்ந்து அவரது உடலை நல்லடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது செவல்குளம் கிராமத்தைச் சேர்ந்த சீனிவேல் மகன் மாரியப்பன் (45) என்பவர் பச்சை பெருமாள் புரம் சுடுகாடு அருகே விவசாயம் செய்து வருகிறார்.

இந்நிலையில் சுடுகாட்டில் குழி தோண்டப்பட்ட நிலம் தன்னுடையது எனக் கூறி அடக்கம் செய்வதற்காக தோண்டப்பட்ட குழிக்குள் இறங்கி உள்ளே படுத்துக்கொண்டார்.

மேலும் கையில் கத்தியையும் வைத்துக்கொண்டார். தொடர்ந்து இதுகுறித்து அடக்கம் செய்வதற்காக வந்த உறவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் வெளியே வருமாறு கூறியும் சுமார் 2 மணி நேரமாக மாரியப்பன் வெளியே வரவில்லை.
இது குறித்து ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழிக்குள் படுத்து இருந்த மாரியப்பன் இடம் பேசி வெளியே வரவழைத்தனர்.
தொடர்ந்து விஏஓ மகாலட்சுமி, வருவாய் ஆய்வாளர் வசந்தகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அடக்கம் செய்வதற்காக தோண்டப்பட்ட குழி உள்ள இடத்தை சர்வே செய்து பார்த்தபோது அது சுடுகாட்டுக்கு சொந்தமான நிலம் என தெரியவந்தது.

இதை அடுத்து போலீசார் மாரியப்பனை சத்தம் போட்டு அனுப்பி வைத்தனர். இதை அடுத்து இறந்தவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மேலும் தன்னுடைய நிலம் என குழிக்குள் இறங்கி படுத்த நபரால் அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.

Views: - 229

0

0