வேலூர் அருகே ரயில் தடம் புரண்டு விபத்து : என்ஜின் ஓட்டுநரின் சமயோஜித புத்தியால் பெரும் விபத்து தவிர்ப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
21 April 2023, 2:32 pm
Train Accident - Updatenews360
Quick Share

சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு 57 வேகன்களில் ( பெட்டி) கோதுமை மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே சோளிங்கர் ரயில் நிலையம் அருகே உள்ள மகேந்திரவாடி ரயில் நிலையத்துக்கு காலை 6.40 மணிக்கு வரும்போது சரக்கு ரயிலின் கார்டு பெட்டி பாயிண்ட் கிராஸிங் இடத்தில் வரும்போது அந்த பெட்டியின் நான்கு சக்கரங்களும் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.’

இதை உடனடியாக உணர்ந்த கார்டு, உடனடியாக என்ஜின் டிரைவருக்கு தகவல் தெரிவித்து ரயிலை நிறுத்தினார் . என்ஜின் டிரைவர் சமயோசிதமாக செயல்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது .

இது குறித்து அரக்கோணம், காட்பாடி ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஜோலார்பேட்டையில் இருந்து ஹைட்ராலிக் இயந்திரம் மற்றும் அதிநவீன கருவிகள் வரவழைக்கப் பட்டுள்ளது.இந்த மீட்பு பணியில் 50க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் . லூப் லைனில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் பயணிகள் ரயில் போக்குவரத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை . இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி ராயக்கோட்டை அருகே சரக்கு ரயில் தடம் புரண்ட நிலையில் மகேந்திரவாடி ரயில் நிலையத்திலும் சரக்கு ரயில் தடம் புரண்டதால் ஒரே நாளில் இரு இடங்களில் சரக்கு ரயில் தடம் புரண்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 233

0

0